கீழாநெல்லி என்கிற மூலிகை செடி உங்கள் வீட்டில் இருக்கிறதா.!? அப்படியானால் இனி உங்களுக்கு இந்த நோய் வரவே வராது.!!

55 Views
Editor: 0

இக்கீரையில் கிட்டத்தட்ட அனைத்துச் சுவைகளும் அடங்கியுள்ளன. புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, இனிப்பு ஆகிய நான்கு சுவைகளும் உண்டு. இக்கீரை குளிர்ச்சித் தன்மை உடையது..

இக்கீரையின் தளிர்களை அரைலிட்டர் தண்ணீரில் இட்டுக் காய்ச்சி, வடிகட்டி தண்ணீரை மட்டும் குடித்து வந்தால் சீதபேதி உடனே மாறும். இரத்த சோகையால் உடல் வெளுத்துக் காணப்படுபவர், மேகநோயால் அவதிப்படுபவர் இதை நன்றாக அரைத்து பசுவின் தயிரில் கலந்து நாள்தோறும் காலையில் பருகி வந்தால் நல்ல பலன் கிட்டும்.மஞ்சள் காமாலையைக் குணப்படுத்த இக்கீரையைத் தவிர வேறு மருந்து கிடையாது. கீழாநெல்லிக்காய்களே ஆங்கில மருத்துவத்திலும் மஞ்சள் காமாலைக்குப் பயன்படுத்தப் படுகிறது.

ழாநெல்லி, தும்பை இலை, கரிசலாங்கண்ணி இவைகளை சம அளவு எடுத்து நன்றாக அரைத்து, காலை, மாலை சுமார் பத்து நாட்கள் உண்டு வந்தால் காமாலை நோய் பூரணமாகக் குணமாகும். பெரியவர்கள் நெல்லிக்காய் அளவும், சிறியவர்கள் சுண்டைக்காய் அளவும் உட்கொண்டால் போதுமானது. காரம், புளியைத் தவிர்த்து, வழக்கத்திற்கு பாதி உப்பு சேர்த்து, பால்சோறு அல்லது தயிர்சோறு மட்டும் சாப்பிட்டு வர வேண்டும்.
தாது பலம் இழந்து மனம் மற்றும் முகவாட்டத்துடன் இருக்கும் ஆண்கள் இக்கீரையுடன் ஓரிதழ் தாமரை இலையையும் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு தினமும் சுமார் நாற்பது நாட்கள் உண்டால் போதும். இழந்த உயிர்சக்தியை மீண்டும் பெறலாம். ஆண்மை மிகும். இக்கீரை பசியை நன்றாகத் தூண்டும்.

சொறி, சிரங்குகளுக்கு இக்கீரையை உப்புடன் சேர்த்து அரைத்துப் பூசினால் நல்ல பலன் கிட்டும். காயங்களுக்கு உப்பு சேர்க்காமல் வெறுமனே இக்கீரையை அரைத்து, பற்றுப் போட்டால் காயங்கள் விரைவில் ஆறும்.
மாதுளைக் கொழுந்தும், இக்கீரையையும் சம அளவில் கலந்து அரைத்து, பசுவின் தயிர் அல்லது மோரில் கலந்து ஓரிரு நாட்கள் குடித்தால் போதும், சீதபேதி குணமாகும்.

கண் பார்வை மங்குதல், மாலைக் கண் போன்ற கோளாறுகளுக்கு, கீழாநெல்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரையை சம அளவு எடுத்து நன்றாக அரைத்து காலை, மாலை புளித்த மோரில் கலந்து தொடர்ந்து நாற்பது நாட்கள் பருகினால் போதும். பார்வை மிகும். கண்பார்வை கூர்மை பெறும்.