தமிழர் இசையானது அறிவின் கொடையாக (intellectual gift) - அறிவின் வல்லமையாக (intellectual talent) - அறிவு சார்ந்த அன்பாக (intellectual love) புதிய சிந்தனைகளை வெளிப்படுத்துவதாக (exploring new ideas) சிக்கலான தொகுதிகளைப் புரிந்துகொள்வதற்கு உரியதாக (understanding complex systems) காணப்படுகின்றது.
ஓம் என்ற மந்திரத்தையும் சிவாய நம என்ற வலிமைமிக்க சொற்களையும் உச்சரித்து (chanting holywords) பயன்படுத்துகின்றபோது அவை மனதை - சிந்தனைகளை அமைதிப்படுத்துவதாகவும் (calmyour mind and thoughts) எதிர்மறை உணர்வுகளையும் எதிர்மறை சிந்தனைகளையும் (negative emotions and thoughts) நீக்குவதாகவும் காணப் படுகின்றது.
தமிழர் இசையான திருநெறிய இசையை கேட்கின்றபோது - பாடுகின்றபோது அது உள ஆற்றலை - உள சக்தியை (boost your brain power) ஊக்கப் படுத்துவதாகக் காணப்படுகின்றது.
அறிவு சார்ந்த சுகவாழ்வை (cognitive health) மேம்படுத்துவதோடு கவனமெடுத்தல், ஒருமுகப்படுத்தல் (concentration) ஆகிய உள செயற்பாடுகளையும் மேம்படுத்துகின்றது.
ஞாபக சக்தி தொடர்பான அறிவியல் செயற்பாடுகளையும் (enhances memory cognitive function) அறிவியல் சார்ந்த செயல் திறனையும் (cognitive performance) பலப்படுத்துகின்றது.
உணர்வுசார் சீர்படுத்தலையும் (emotional regulation) நினைவாற்றலில் அதீத செல்வாக்கையும் (profound impact on memory) ஏற்படுத்துகின்றது. திருமுறைகளை செவிமடுத்தலானது புதியவற்றை செயற்படுத்தத் தூண்டுவதையும் (novel activities) புதிய செயற்பாடுகளை செய்யத் தூண்டுவதோடு நரம்பியல் இணைப்புகளை (neural connections) தூண்டுவதாகவும் காணப்படுகின்றது.
மேலும் மூளையின் சுகவாழ்வை ஊக்கப்படுத்துவதாகவும் (boosting brain health) திருமுறைகள் அருட்சக்தி (power of divine energy or super power) மிகுந்ததாகவும் இந்த உலகின் உயர்ந்த உன்னத சக்தியாக (the greatpower of this universe) இந்த அமைதி சார்ந்த உணர்வுகளின் மேம்பாட்டுக்காக (the great power of this universe) காணப்படுகின்றது.
"மாதர் பிறைக் கண்ணியானை மலையான்
மகளொடு பாடிப்போ தொடு நீர் சுமந்தேத்தி
புகுவார் அவர் பின் புகுவேன் யாதும் சுவடு
படாமல் ஐயாரடைகின்ற போது காதலன்
மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம்
கண்ட றியாதன கண்டேன்"
‘‘மாதர் பிறைக்கண்ணி யானை’’ தொடங்கும் பாடல் அடிகளில் ‘‘கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்’’ என்று இறைவனின் காட்சியை பாடலிலே ஏற்படுத்தி அடியார்கள் இறைவனின் காட்சியை உளரீதியாக மனதில் நிலைநிறுத்தும் வண்ணம் (visualisation guided imagery மனதில் இறைவனின் காட்சியை ஏற்படுத்தி அமைதிப்படுத்துகின்ற முறையை (sense of calm) வழிப்படுத்துகின்றார்.
திருமுறைகள், எமது சக்தியை நேர்முக சக்தியாகத் தூய்மைப் படுத்தவல்லன (clear our energy with positive energy). மேலும், திருமுறை இசையானது சத்துவ குணத்தை மேம்பாடு அடையச் செய்வதுடன், மன அமைதிக்கான உணர்வுகளை மேம்படுத்துவதாக (enhancing emotions of tranquility and serenity) அருட் சக்தி அல்லது தெய்வீக சக்தியின் மூலம் குணப்படுத்துகின்ற (energy healing) முறைமையாக மன அழுத்தத்தை சமாளிப்பதாகவும் (alleviate emotional blockages) நரம்புத் தொகுதியை அமைதிப்படுத்துவதாகவும் (nervous system) உள்ளார்ந்த அமைதியை (sense of inner peace) சிவாய நம, நமசிவாய போன்ற தெய்வீக ஒலிகள் (spiritual power of ancient alphabets), திருமுறை நூல்கள் அருளியல்சார்ந்த எழுத்துருக்களாக (divine scripts) காணப்படுகின்றன.
தெளிவான சிந்தனையைப் பலப்படுத்துவதுடன் ability to think clearly மனத் தெளிவை மேம்படுத்துவதாகவும் (enhances mental clarity) உணர்வுகளின் உறுதித்தன்மையை (emotional stability) - மூளையின் புத்திக்கூர்மையை (improve brain intelligence) அதிகரிப்பதாகவும் காணப்படுகின்றது.
‘‘தமிழிசையோடு பாட மறந்தடியேன்’’ அர்ச்சனை பாட்டேயாகும் என்ற வரிகள் அருட்பாக்களின் வல்லமையையும்
அவை உள சுக வாழ்வில் எவ்வாறு சுகானுபவங்களை வழங்குகின்றன என்பதையும் புலப்படுத்துகின்ற வரிகளாகக் காணப்படுகின்றன.