ஒவ்வொரு நாளையும் புத்துணர்ச்சியுடன் ஆரம்பிக்கவும் உடல் ஆரோக்கியமாக இருக்கவும் உணவு இன்றியமையாததாக உள்ளது.
ஆனால், காலை எழுந்தவுடன் தேநீரை அருந்தி காலை உணவை தவிர்த்து விட்டு அந்நாளை ஆரம்பிக்கின்றோம். நாம் இவ்வாறு செய்வது நமது புதிய நாளை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் சேர்த்து பாதிக்கிறது.
அந்தவகையில், நாம் காலையில் என்னென்ன சாப்பிட வேண்டும் என்பதை இந்தப் பதிவில் தெரிந்துக் கொள்வோம்.
1. காலையில் சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று முட்டை. புரதத்தின் சிறந்த மூலமாக கருதப்படுகிறது. மேலும் இது சமிபாடடைய நீண்ட நேரம் எடுக்கும். எனவே, முட்டை சாப்பிட்ட பிறகு வயிறு நீண்ட நேரம் நிரம்பி இருக்கும். முட்டையானது. மூளை மற்றும் கல்லீரலுக்கு நன்மையளிக்கிறது.
2. காலையில் வெறும் வயிற்றில் பப்பாளிப் பழம் சாப்பிடுவது உடலுக்கு அத்தனை நன்மைகள் கொடுக்கும். பப்பாளி வயிற்றைச் சுத்தப்படுத்தும். அதுமட்டுமின்றி, கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கும்.
3. ஒவ்வொரு நாளும் ஓட்ஸ் சாப்பிடுவது நல்ல காலை உணவாகும். ஓட்ஸில் இரும்பு, விட்டமின் பி, மெக்னீசியம் துத்தநாகம் போன்றவற்றின் நல்ல மூலமாகும். மேலும், ஓட்ஸ் கொலஸ்ரோல் அளவைக் குறைக்க உதவுகிறது.
4. காலையில் கிரீன் டீ அருந்துவது அந்நாளை புத்துணர்ச்சியாக்குவதோடு மனநிலையையும் நன்றாக வைத்திருக்கும்.