கொரோனா தடுப்பூசி
மாஸ்கோ:
கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்த வைரசுக்கான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகளின் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதில் சில நிறுவனங்களின் மருந்துகளின் பரிசோதனைகள் இறுதிக்கட்டதை எட்டியுள்ளன. ஆனால் இதுவரை எந்த மருந்தும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்து, அதனை மனிதர்கள் மீது செலுத்தி ரஷியா வெற்றியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தடுப்பு மருந்து பரிசோதனையில் வெற்றி பெற்ற முதல் நாடு என்ற பெருமையை ரஷ்யா பெற்றுள்ளது. இதுபற்றி ரஷிய செய்தி நிறுவனமான ஸ்புட்னிக் அதிகாரப்பூர்வ செய்தி வெளியிட்டுள்ளது.