கற்பூரவள்ளி டீ
தேவையான பொருட்கள் :
கற்பூரவள்ளி இலைகள் - 5,
இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்புன்,
டீத்தூள் - ஒரு டீஸ்பூன்,
எலுமிச்சை சாறு - தேவையான அளவு
தேன் - தேவைக்கு,
தண்ணீர் - 2 கப்.
செய்முறை :
கற்பூரவள்ளி இலையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் டீத்தூள், இஞ்சித் துருவல், ஓமவல்லி இலைகள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
பிறகு வடிகட்டி தேவையான அளவு தேன், எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.