எந்த மாதிரியான ஹெட் போன் பயன்படுத்துவது நல்லது? நாள் முழுக்க காதில் வைத்திருந்தாலும், பாதிப்பு ஏற்படுத்தாத இயர்போன்! விலையும் குறைவு தான்!
'எந்த மாதிரியான ஹெட் போன் வாங்கினால் என்ன? சாதாரண ஹெட் போன் வாங்க எதற்கு இவ்வளவு மெனக்கெட வேண்டும், நமக்கு சீப்பாக கிடைத்தால் போதும்' என நினைக்க வேண்டாம். அன்றாடம் பயன்படுத்தும் ஒன்று, சரியாக பார்த்து வாங்காவிடின் தேவையற்ற உபாதைகள் தான் வரும். சந்தையில் பல வகையான இயர்போன்கள் இருப்பினும் காதுகளையும் மூளையையும் பாதிக்காத அதே நேரம் விலைகுறைவான இயர்போன்கள் சிலவற்றை காண்போம்.
earphone with buds, - இந்த வகை இயர்போன்களில் சத்தம் சிறப்பாக இருக்கும். தரமான இயர்போன் எனும் போது, பாடல் இரைச்சல் இல்லாமல் கேட்கும். வெளியே உள்ள இரைச்சல் கேட்க கூடாது என இயர்பட்ஸ் வைத்திருப்பார்கள். ஆனால் இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், முழு சத்தம் வைத்து கேட்டு பழகி விடுவோம். இதே இயர்போனில் குறைந்த சத்தத்தில் பாடல் கேட்க பிடிக்காமல் போய்விடும். இறுதியில் தலைவலி தான் மிச்சம். இந்த வகை இயர்போன் பயன்படுத்துபவர்கள், இறுதிவரை குறைவான சத்தத்திலே கேட்டு பழகுவது நல்லது.
flat head earphones - இதில் ஒலி அளவை முழுதாக வைத்து கேட்டால் கூட, தலைவலி போன்ற பிரச்சனைகள் இருக்காது. இந்த வகையில் முழு சத்தத்தில் கூட, வெளியே யாராவது பேசினால் தெளிவாக கேட்கும். ஆனால் இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், இதனை காதினுள் சிக்க வைப்பது அவ்வளவு எளிதல்ல. பழைய மாடல்வகை.
In ear headphones- இந்த வகை இயர்போனில் தரமான கம்பெனியின் ஆரம்ப விலையே 500 ரூபாய். பாடல் கேட்கும் போது, இரைச்சல் இல்லாமல் தெளிவாக பாடல் வரிகள் கேட்கும். எவ்வளவு நேரம் கேட்டாலும் தலைவலி வராது. இந்த வகை இயர்போன் சரியான தேர்வு என்பது பயன்படுத்தியவர்களின் கருத்து.
headphones - இந்த வகையில் on ear, over ear என சில வகைகள் உண்டு. எடுத்து செல்ல வசதியாக இருக்காது என சிலர் இந்த வகை ஹெட் போனை பயன்படுத்த மாட்டார்கள். மேலே சொன்ன இயர் போனுக்கும் இந்த வகை ஹெட் போனுக்கும் என்ன வித்தியாசம் என்றால், இந்த வகையில் இரைச்சல் எதுவும் இல்லாமல் பாடல் தெளிவாக கேட்கும். ரயில் பயணத்தின் போது இவை மிகவும் வசதியாக இருக்கும். ஒருமுறை இதில் பாடலை கேட்க ஆரம்பித்துவிட்டால், தொடர்ச்சியாக இதனையே பயன்படுத்த விரும்புவீர்கள். இரைச்சல் கிடையாது, இரைச்சலால் தலைவலி கிடையாது. இத்தனை சிறப்பம்சம் கொண்டிருப்பதால் இதன் விலையும் சற்றே அதிகம்.