ஆம்பூர் அருகே இடி தாக்கி தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது.
வாணியம்பாடி, அக்.23- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட ராமசந்திராபுரம் குடியிருப்பு பகுதியில் திடீரென பலத்த சத்தத்துடன் தென்னை மரத்தின் மீது இடி விழுந்ததில் தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்து ஆம்பூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இடி தாக்கி தென்னை மரம் தீ பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.