நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர், இவர் தனது அசாத்தியமான நடிப்பால் அனைவரையும் கட்டிப் போட்டவர் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர், இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தர்பார் திரைப்படத்தில் நடித்துள்ளார், இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் அடுத்ததாக ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் அம்மனாக நடிக்க இருக்கிறார் இந்தத் திரைப்படத்திற்காக நயன்தாரா விரதம் இருந்து வருவதாக ஆர்ஜே பாலாஜி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டுக்கு சென்று அசைவ பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஷாக்காகி உள்ளார்கள்.
விரதம் என கூறினீர்களே இப்படி அசைவ பார்ட்டியில் கலந்து கொள்கிறீர்கள் என கேள்வி கேட்டு வருகிறார்கள் ரசிகர்கள், மேலும் சில ரசிகர்கள் இதுதான் உங்கள் விரதமா என கலாய்த்து வருகிறார்கள்.