உலகின் 200 நாடுகளில் பரவிய கொரோனா தொற்று, இந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவி அதிவேகம் எடுத்துள்ளது. நேற்று தொடர்ந்து 3-வது நாளாக 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதித்துள்ளது.
ஒரே நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 850 உயர்ந்தது. மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி, தெலுங்கானா, கர்நாடகா, அசாம், பீகார் ஆகிய 7 மாநிலங்கள் மட்டுமே 78 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன.
மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 7,074 பேருக்கு தொற்று உறுதியாக, அங்கு மொத்தம் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. ஒட்டு மொத்தமாக பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 6 லட்சத்து 73 ஆயிரத்து 165 ஆக உள்ளது.
இதன்மூலம், அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா மைய தரவுகள் படி, 3வது இடத்தில் உள்ள ரஷியாவை இந்தியா பின்னுக்கு தள்ளி இருக்கிறது. இந்தியா இப்போது கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்து 3வது இடத்தில் உள்ளது.
Tags: இந்தியா கொரோனா, டிரெண்டிங், ரஷ்யா