லண்டனில் சீனாவிற்கு எதிராகத் திரண்ட இந்தியர்கள் சீன தூதரகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, இந்திய தேசிய கீதத்தை அனைவரும் சேர்ந்து இசைத்தனர். அந்த ஆர்ப்பாட்டத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களும் தங்கள் நாட்டின் மீது சீனா ஆதிக்கம் செலுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இந்தியர்களுடன் பாகிஸ்தானியர்களும் இணைந்து இந்திய தேசிய கீதத்தைப் பாடிய காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.