12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற தையல்காரரின் மகள் பத்திரிகையாளராக விருப்பம்

29 Views
Editor: 0

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்று சாதனை படைத்த தையல்காரரின் மகள் பத்திரிகையாளராக வரவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்..

ராஞ்சி,

 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன.  கலை, வர்த்தகம் மற்றும் அறிவியல் ஆகிய பிரிவுகளை உள்ளடக்கிய இந்த தேர்வில் கலை பிரிவுக்கான தேர்வில் மாநில அளவில் நந்திதா ஹரிபால் என்ற மாணவி முதலிடம் பெற்றுள்ளார்.

இவரது தந்தை தையல்காரர்.  தாயார் வீட்டு பணிப்பெண்ணாக இருந்து வருகிறார்.  இவருக்கு ஒரு சகோதரி மற்றும் ஒரு சகோதரன் உள்ளனர்.  தேர்வில் முதலிடம் பெற்று தேர்ச்சி பெற்ற தகவல் அறிந்ததும் மாணவியின் பெற்றோர் அளவில்லா ஆனந்தம் அடைந்தனர்.  தங்களது மகளுக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

தேர்வில் முதலிடம் கிடைத்தது பற்றி மாணவி நந்திதா செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, ‘இந்த தகவலை அறிந்தவுடன் நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன்.  மாநில அளவில் தேர்வில் முதலிடம் பிடிப்பேன் என நான் எதிர்பார்க்கவே இல்லை’ என கூறினார்.  ‘வருங்காலத்தில் ஒரு பத்திரிகையாளராக வரவேண்டும் என நான் விரும்புகிறேன்’ என்றும் அவர் கூறினார்.