மோடி டுவிட்டரை பின்தொடர்வோர் எண்ணிக்கை 6 கோடி ஆக அதிகரிப்பு.

34 Views
Editor: 0

சமூக ஊடகங்களில் ஒன்றான டுவிட்டரில் பிரதமர் மோடியை பின்தொடர்வோர் எண்ணிக்கை 6 கோடி ஆக அதிகரித்துள்ளது..

பிரதமர் மோடி சமூக ஊடகங்களான டுவிட்டர் மூலம் மக்களை சென்றடைவதில் புகழ் பெற்றவர். கடந்த 2009 ம் ஆண்டு டுவிட்டரில் மோடி @narendramodi என்று கணக்கை துவக்கிய போது அவரை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 2,354 ஆக இருந்தது.

தொடர்ந்து அதிகரித்து வந்த பின் தொடர்வோரின் எண்ணிக்கை 2019 ம் ஆண்டு 5 கோடிஎன்ற அளவிற்கு அதிகரித்தது. தற்போது இதன் எண்ணிக்கை 6 கோடி ஆக உயர்ந்துள்ளது.பிரதமர் அலுவலக கணக்கை பின்பற்றுவோரின் எண்ணிக்கை 3.7 கோடிஆக உள்ளது.

அதே நேரத்தில் எதிர்கட்சியான காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் கடந்த 2015 ம் ஆண்டில் டுவிட்டரில் கணக்கை துவக்கினார். 1.5 கோடி பேர் அவரை பின்பற்றுகின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கை 8.3 கோடி பேர் பின்தொடர்கின்றனர்.