நிலச்சரிவில் புதைந்த வீடு
வட இந்தியாவில் பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அசாமில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழைக்கு 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
டெல்லியில் நேற்று 3 மணி நேரம் இடைவிடாமல் கனமழை பெய்தது. இதில் டெல்லி நகரமே ஸ்தம்பித்தது.
இந்நிலையில் ஜார்க்கண்டில் உள்ள மட்கோட் என்ற கிராமத்தில் இன்று பேய்மழை பெய்தது. இதை பொதுவாக வானத்தை கிழித்துக் கொண்டு வெள்ளம் கொட்டியது (cloud burst) என்று அழைப்பார்கள். ஒரே இடத்தில் அப்படி பெய்ததால் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் வீடுகள் வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்பட்டது.
இந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். மட்கோட் அருகில் உள்ள கிராமத்தில் 8 பேர் காணவில்லை. மீட்புக்குழு சம்பவ இடதிற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.