ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவை ஒட்டி நாடு முழுவதும் நிகழ்ச்சிகளை நடத்த பாஜக முடிவு

39 Views
Editor: 0

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவு நீக்கம் மற்றும் முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றம் ஆகியவற்றின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு நாடு முழுவதும் நிகழ்ச்சிகளை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது..

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த ஆண்டு தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதையடுத்து காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதுடன், முத்தலாக் தடைச்சட்டமும் நிறைவேற்றப்பட்டது.

இந்நிகழ்வுகளின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு. நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க பாஜக முடிவெடுத்துள்ளது. இதையொட்டி மாநில பாஜக தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு அக்கட்சி தலைமை கடிதம் எழுதியுள்ளது.