இந்தியாவில் ஒரே நாளில் 37,224 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்:
புதுடில்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 55,079 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியது. இதுவரை 10,57,806 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரம்:
பரிசோதனை:
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 6,42,588 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு செய்யப்பட்டன. இதனையடுத்து, கொரோனா பரிசோதனை எண்ணிக்கை, 1,88,32,970 ஆக அதிகரித்துள்ளது.