இந்தியாவில் 3 டாலருக்கு(இந்திய மதிப்பில் ரூ.225) கிடைக்கவிருக்கும் கொரோனா தடுப்பு மருந்து !

35 Views
Editor: 0

கொரோனா தடுப்பூசி 3 டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.225)கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என சீரம் நிறுவனத்தின் சேர்மன் அதர் பூனவாலா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்..

இந்தியாவில் 3 டாலருக்கு(இந்திய மதிப்பில் ரூ.225) கிடைக்கவிருக்கும் கொரோனா தடுப்பு மருந்து !

 

கொரோனா தடுப்பூசி 3 டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.225)கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என சீரம் நிறுவனத்தின் சேர்மன் அதர் பூனவாலா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை இங்கிலாந்தை சேர்ந்த ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்துள்ளது. அந்த தடுப்பு மருந்து சோதனைகளுக்கு பிறகு 1077 மனிதர்கள் மேல் சோதனை செய்யப்பட்டது. அதில் அனைவருக்கும் கொரோனா தடுப்பு ஆற்றல் கிடைத்துள்ளதாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அறிவித்தது. மேலும் கூடிய விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு அவை வரும் என்றும் அறிவித்தது.

இந்த மருந்தை இந்தியாவில் உற்பத்தி செய்ய சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் அனுமதி பெற்றது. மேலும் இதற்கு இந்திய அரசின் அனுமதியும் கிடைத்தது. மேலும் இந்தியாவில் அதை பரிசோதனை செய்ய இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் அனுமதியையும் பெற்றது. இந்த சோதனை வெற்றிபெறும் பட்சத்தில் இந்த மருந்தை கோவிஷீல்டு என்ற பெயரில் இந்தியாவில் தயாரிக்க சீரம் நிறுவனம் திட்டமிட்டது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி 3 டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.225) கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று சீரம் நிறுவனத்தின் சேர்மன் அதர் பூனவாலா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.