இந்தியாவில் 16.95 லட்சம் பேர் குணமடைந்தனர்:
புதுடில்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 66,999 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 56, 383 பேர் குணமடைந்தனர்.
இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரம்:
இந்தியாவில் உயிரிழப்பு சதவீதம் 1.98 சதவீதம் ஆகவும், குணமடைவோர் விகிதம் 70.98 சதவீதமாகவும் உள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பரிசோதனை:
நேற்று ஒரே நாளில் மட்டும், 8,30,391 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதனால், மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 2,68,45,688 ஆக அதிகரித்துள்ளது.