ஜம்மு காஷ்மீர்: போலீசாரை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு:
ஜம்மு காஷ்மீரில் போலீசாரை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
ஸ்ரீநகர்,
நாட்டின் 74-வது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்பதால், அந்த யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் திவீர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து விரிவான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.