50 லட்சம் தடுப்பூசிகள்: மத்திய அரசு திட்டம்.

28 Views
Editor: 0

புதுடில்லி: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் சுகாதார பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்டோருக்காக 50 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்வது தொடர்பாக மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது..

50 லட்சம் தடுப்பூசிகள்: மத்திய அரசு திட்டம்:

புதுடில்லி: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் சுகாதார பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்டோருக்காக 50 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்வது தொடர்பாக மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

தடுப்பூசி ஒழுங்குமுறை அனுமதி கிடைத்தவுடனும், மருந்து பயன்பாட்டிற்கு வந்தவுடன், இதற்கு முன்னுரிமை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் சுகாதார பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் எளிதில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளவர்களுக்கு தடுப்பூசியை கிடைக்க செய்ய வேண்டும் என அரசு விரும்புகிறது.
latest tamil news

இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் சுகாதார பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்டோருக்காக 50 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்ய மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. ஒரே நேரத்தில ஒன்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டிருக்கலாம்.

நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் மற்றும் சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் தலைமையிலான கோவிட் தடுப்பூசி நிர்வாகம் தொடர்பாக அமைக்கப்பட்ட நிபுணர் குழு, சமீபத்தில், தடுப்பூசி உருவாக்கும் முக்கிய நிபுணர்களை சந்தித்து பேசியது. அப்போது உற்பத்தி, விலை நிர்ணயம் மற்றும் அரசு எந்த வகையில் ஆதரவு அளிக்க வேண்டும் என்பது குறித்து தெரிவிக்கும்படி கேட்டு கொண்டனர்.

தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், தடுப்பூசி உருவாக்குவதற்கு அதிக முதலீடு தேவைப்படுகிறது. தடுப்பூசிகளின் உற்பத்தியை அதிகரிக்க நாங்கள் முழு திறனையும் அர்ப்பணிக்கிறோம். எனவே அரசாங்கங்கள் விரிவான சந்தை வாய்ப்புகளை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மற்றொரு அதிகாரி ஒருவர் கூறுகையில், தேவைப்பட்டால், தடுப்பூசியை உற்பத்தியை செய்ய நிதியுதவி செய்வது குறித்து நிபுணர் குழு ஆலோசித்து வருகிறது. தற்போது, இது ஆலோசனை நிலையில் தான் உள்ளது. உரிய ஆலோசனைக்கு பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.
latest tamil news

தற்போது, இந்தியாவில், மூன்று தடுப்பூசிகள் பரிசோதனை அளவில் உள்ளன. புனேவை மையமாக கொண்ட சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா - ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் 2 மற்றும் 3 ம் கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது. பாரத் பயோடெக் மற்றும் ஜைடஸ் காடிலா ஆகிய இரண்டு உள்ளூர் நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் ஆரம்ப கட்டம், முதல் மற்றும் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளன.