ஜார்க்கண்டில் மருத்துவமனையில் தூக்கு போட்டு கொரோனா நோயாளி தற்கொலை.

29 Views
Editor: 0

ஜார்க்கண்டில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்..

ஜார்க்கண்டில் மருத்துவமனையில் தூக்கு போட்டு கொரோனா நோயாளி தற்கொலை:

 

ஜார்க்கண்டில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராஞ்சி,

 

ஜார்க்கண்டின் ராஞ்சி நகரில் ராஜேந்திரா மருத்துவ அறிவியல் மையம் (ரிம்ஸ்) அமைந்துள்ளது.  இதில், கார்வா மாவட்டத்தில் வசித்து வந்த 32 வயது வாலிபர் ஒருவர் கொரோனா பாதிப்புக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை அவர் மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டின் படிக்கட்டு பகுதியில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  அவரது உடலை ராஞ்சி போலீசார் கைப்பற்றி உள்ளனர்.  தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.