இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32 லட்சத்தை தாண்டியது

26 Views
Editor: 0

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 32 லட்சத்தை தாண்டியுள்ளது..

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32 லட்சத்தை தாண்டியது:

 

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 32 லட்சத்தை தாண்டியுள்ளது.

புதுடெல்லி,

 

உலகம் முழுவதும் கடந்த 8 மாதங்களாக கோரத்தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸ் தினமும் ஆயிரக்கணக்கான புதிய நோயாளிகளையும், மரணங்களையும் ஏற்படுத்தி வருகிறது. 

 

இந்த வைரசுக்கு எதிராக தடுப்பு மருந்துகளோ, தடுப்பூசியோ இன்னும் பயன்பாட்டுக்கு வராததால் கொரோனாவின் பரவல் வேகத்துக்கு அரசுகளால் ஈடுகொடுக்க முடியவில்லை. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தினமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  

 

 

இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 32 லட்சத்தை தாண்டியுள்ளது. 

 

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கொரோனா பாதிப்புகளுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 67,151 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 32 லட்சத்து 34 ஆயிரத்து 475 ஆக உயர்ந்துள்ளது.

 

கொரோனா பாதிப்பால் 7 லட்சத்து 07 ஆயிரத்து 267 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 63,173 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 24 லட்சத்து 67 ஆயிரத்து 759 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். நேற்று ஒரே நாளில் 1,059 பேர் பலியாகி உள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 59,449 ஆக உயர்வடைந்து உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

 

நாடு முழுவதும் நேற்று 8,23,992 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதனுடன் 3 கோடியே 76 லட்சத்து 51 ஆயிரத்து 512 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து 75.92 சதவிதம் பேர் குணமாகி உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.