இந்தியாவில் 25 லட்சம் பேர் நலமடைந்தனர்:
புதுடில்லி: இந்தியாவில் கொரோனாவில் இருந்து நலமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டியுள்ளது. அதே நேரத்தில், கடந்த 24 மணி நேரத்தில், 75,760 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரம்:
பரிசோதனை
நேற்று(ஆக.,26) ஒரே நாளில் 9,24,998 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 3,85,76,510 ஆக அதிகரித்துள்ளது.