கிராமப்புற நடுநிலைப் பள்ளிகளில் விவசாய பாடம்- பிரதமர் மோடி:

36 Views
Editor: 0

ஜான்சியில் உள்ள வேளாண் பல்கலைக்கழக புதிய கட்டிடங்களை பிரதமர் மோடி திறந்து வைத்து உரையாற்றினார்..

கிராமப்புற நடுநிலைப் பள்ளிகளில் விவசாய பாடம்- பிரதமர் மோடி:

 

ஜான்சியில் உள்ள வேளாண் பல்கலைக்கழக புதிய கட்டிடங்களை பிரதமர் மோடி திறந்து வைத்து உரையாற்றினார்.

வேளாண் பல்கலைக்கழக கட்டிடங்களை திறந்து வைத்த பிரதமர்

ஜான்சி:

உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள  ராணி லட்சுமிபாய் மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தின் கல்லூரி மற்றும் நிர்வாக கட்டிடங்களை பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-

விவசாயியை தொழில்முனைவோராக மாற்றுவதே விவசாயத்தின் தன்னிறைவு அடைவதன் குறிக்கோள் ஆகும். விவசாயம், விவசாயிகள் தொழில் வடிவத்தில் முன்னேறினால் கிராமங்களில் சுய வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.

வேளாண்மையில் தன்னிறைவு என்பது உணவு தானியங்களில் தன்னிறைவு அடைவது மட்டுமல்ல, கிராமத்தின் முழு பொருளாதாரத்தின் தன்னம்பிக்கையையும் உள்ளடக்கியது.

வேளாண்மை தொடர்பான கல்வியையும் அதன் நடைமுறை பயன்பாட்டையும் பள்ளிகளுக்கு எடுத்துச் செல்வது அவசியம். கிராமங்களில் நடுநிலைப்பள்ளி மட்டத்தில் விவசாயத்தை ஒரு பாடமாக அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் இந்நிகழ்ச்சியின் போது பல்கலைக்கழகத்தின் பல மாணவர்களுடன் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது புதிய கட்டிடங்கள் மாணவர்கள் சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கும் என்று கூறினார்.

விழாவில் மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.