பிரணாப் முகர்ஜியின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி..!

36 Views
Editor: 0

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார்..

பிரணாப் முகர்ஜியின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி..!

 

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி சிகிச்சை பலன் இன்றி நேற்று டெல்லி ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் காலமானார். நாடாளுமன்ற உறுப்பினர், குடியரசு தலைவர், ஆசிரியர் போன்ற பண்முக தன்மையுடன் விளங்கிய பிரணாப், மக்களுக்கான சேவையை மையமாக வைத்து மட்டுமே வாழ்ந்துள்ளார்.

அவரின் இழப்பு நாட்டு மக்கள் அனைவருக்கும் பேரிழப்பாகவே உள்ளது. இந்தநிலையில், அவரின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், அயல் நாட்டு அதிபர்கள் மற்றும் பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், டெல்லியில் உள்ள அவரது வீட்டில் பிரணாப் முகர்ஜியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு நேரில் சென்ற பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து, கை கூப்பி வணங்கி பிரணாப் முகர்ஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, அவரது மகன் அபிஜித் முகர்ஜிக்கு ஆறுதல் கூறினார் பிரதமர்.

இதேபோல், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மாநில முதலமைச்சர்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்துகின்றனர். மட்டும் இன்றி பிரணாப் முகர்ஜியின் உடல் 1 மணி நேரம் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து, இன்று பிற்பகல் பிரணாப் முகர்ஜியின் உடல் அரசு மறியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அதற்கான முன்னெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

கொரோனா அச்சம், பொது முடக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும், தலைவர்கள் வருகையாலும் டெல்லி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.