நீட் தேர்வு அச்சம் - தமிழகத்தில் மேலும் ஒரு மாணவன் தற்கொலை - ஒரே நாளில் 2 மரணங்கள்

58 Views
Editor: 0

நீட் தேர்வு அச்சம் காரணமாக தர்மபுரியை சேர்ந்த ஒரு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்..

தர்மபுரி:

நீட் தேர்வு அச்சம் - தமிழகத்தில் மேலும் ஒரு மாணவன் தற்கொலை - ஒரே நாளில் 2 மரணங்கள்:

 

நீட் தேர்வு அச்சம் காரணமாக தர்மபுரியை சேர்ந்த ஒரு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நாடு முழுவதும் நீட் தேர்வு நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்பதற்காக மாணவ,மாணவிகள் தயாராகி வருகின்றனர்.

இதற்கிடையில், நீட் தேர்வில் தோல்வியடைந்துவிடுவோமோ? என்ற அச்சத்தில் மாணவ,மாணவிகள் விபரீத முடிவுகளை எடுத்து வருகின்றனர். 

மதுரையை சேர்ந்த 19 வயது மாணவி ஜோதிஸ்ரீ துர்கா நாளை நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தார். 

ஆனால், நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ? என்ற அச்சத்தில் மாணவி ஜோதிஸ்ரீ துர்கா இன்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

இந்நிலையில், தர்மரி மாவட்டத்தை சேர்ந்த ஆதித்யா (20) என்ற மாணவரும் நாளை நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். ஆனால், நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ? என்ற அச்சத்தில் ஆதித்யா இன்று விபரீத முடிவெடுத்து வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆதித்யாவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் தேர்வு அச்சம் காரணமாக இன்று ஒரே நாளில் 2 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.