வாணிம்பாடி தொகுதி திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாக முகவர்கள் (BLA-2) ஆலோசனை கூட்டம் நிம்மியம்பட்டு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் ஆர்.எஸ்.ஆனந்தன், மாவட்ட துணைச் செயலாளர் ஆ.சம்பத்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் மு.அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தலைமை கழக செய்தி மக்கள் தொடர்பு துணை செயலாளர் மருத்துவர் எஸ்.ஏ.எஸ்.ஹபீசுல்லா மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற க.தேவராஜி ஆகியோர் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எவ்வாறு பணியாற்றுவது, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பான ஆலோசனைகளை வழங்கி பேசினர்.
கூட்டத்தில் வாணியம்பாடி நகர செயலாளர் வி.எஸ்.சாரதிகுமார், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஞானவேலன், ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.தாமோதிரன், திருப்பத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.ஆர்.திருப்பதி, நாட்டறம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.சாமுடி,
உதயேந்திரம் பேரூர் செயலாளர் ஆ.செல்வராஜ், ஆலங்காயம் பேரூர் செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே.பிரபாகரன், மாவட்ட விவசாயி அணி அமைப்பாளர் பூ.சதாசிவம், மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் தேவகுமார் மற்றும் பாக முகவர்கள் 250க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.