ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் வி.ஆர்.நசீர் அஹ்மத் தலைமையில் கட்சியினர் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது புகார் மனு.
வாணியம்பாடி,நவ.9- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் வி.ஆர்.நசீர் அஹ்மத் தலைமையில் கட்சியினர் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது புகார் மனு அளித்தனர்.
மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் பேரா எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்களை அவதூறாக பேசிய பாஜக தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு அளித்தனர்.
அப்போது மாநில, மாவட்ட, ஆம்பூர் நகர மற்றும் மாதனூர் ஒன்றிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.