வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்.

98 Views
Editor: 0


வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்..

வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்.

வாணியம்பாடி, அக்.21- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்

பெற்றோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நேற்று 20 ஆம் தேதி பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் டாக்டர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.

பள்ளி நிர்வாக இயக்குனர் ஷபானா பேகம், நிர்வாக முதல்வர் சத்தியகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட

பெற்றோர்களுக்கு பந்து எறிதல், லக்கி கார்னர், பலூன் ரேஸ், களிமண் உருவம் செய்தல் மற்றும் ராக்கெட் செய்தல், காகித கப்பல் செய்தல், தடகள ஓட்டம் போன்ற பல போட்டிகள் நடத்தப்பட்டன.

அனைத்து போட்டிகளிலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்பபடுத்தினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி தாளாளர் செந்தில்குமார் பாராட்டி பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகள் முழுவதையும் ஒருங்கிணைப்பாளர் ஹாஜிரா இராம் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ராம்குமார் செய்திருந்தனர்.