ரூ.4 கோடிக்கு தோனியை தக்கவைத்தது சிஎஸ்கே அணி.
2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் தோனி விளையாடுவது உறுதியானது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் மஹேந்திர சிங் தோனியை ரூ.4 கோடிக்கு தக்கவைத்தது.
2025 ஐபிஎல் தொடரில் அதிக தொகைக்கு 3 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர்
ஹைதராபாத் அணியில் ஹென்ரிச் க்ளாசன் ரூ.23 கோடிக்கும், பெங்களூரு அணியில் விராட் கோலி ரூ.21 கோடிக்கும், லக்னோ அணியில் நிக்லோஸ் பூரான் ரூ.21 கோடிக்கும் தக்கவைப்பு.
2024 ஐபிஎல் தொடரில் கேப்டன்களாக இருந்த கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய 3 வீரர்களும் தங்கள் அணிகளில் இருந்து விடுவிப்பு.
லக்னோ, டெல்லி, கொல்கத்தா ஆகிய 3 அணிகளுக்கு புதிய கேப்டன்கள் நியமிக்கப்படலாம் என தகவல்.
மும்பை அணியில் இருந்து ரோஹித் விடுவிக்கப்படுவார் என தகவல் வெளியான நிலையில் தக்கவைப்பு.
ரோஹித் ஷர்மா ரூ.16.30 கோடி, பும்ரா ரூ.18 கோடி, சூர்யகுமார் யாதவ் ரூ.16.35 கோடி, ஹர்திக் பாண்டியா ரூ.16.35 கோடி, திலக் வர்மா ரூ.8 கோடிக்கு தக்கவைத்தது மும்பை அணி.