நியூசிலாந்தை வெற்றி செய்யுமா இலங்கை-கடைசி ஒருநாள் போட்டி இன்று மோதல்
 

83 Views
Editor: 0

சுற்றுலா நியூசிலாந்து அணியுடனான 2வது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றியீட்டிய இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரைக் கைப்பற்றி 12 ஆண்டுகளின் பின் நியூசிலாந்து அணியுடன் இருதரப்பு ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய வரலாற்றை பதிவு செய்தது..

சுற்றுலா நியூசிலாந்து அணியுடனான 2வது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றியீட்டிய இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரைக் கைப்பற்றி 12 ஆண்டுகளின் பின் நியூசிலாந்து அணியுடன் இருதரப்பு ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய வரலாற்றை பதிவு செய்தது. 

இந்நிலையில் மூன்றாவதும், இறுதியுமான போட்டி இன்று பல்லேகலையில் நடைபெறும் நிலையில் இலங்கை அணி அதிலும் வெற்றியீட்டி தொடரை 3-0 என்ற அடிப்படையில் கைப்பற்றி நியூசிலாந்து அணியை முதல் முறையாக ஒருநாள் தொடரில் வெள்ளையடிப்பு செய்யும் முனைப்பில் உள்ளது. 

கண்டி, பல்லேகலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற 2வது போட்டியில் மழையின் குறுக்கீட்டினால் 47 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 45.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 209 ஓட்டங்களை பெற்றது.

210 என்ற இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய இலங்கை அணி 45.2 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்தது. போட்டியின் ஆட்டநாயகனாக குசல் மெண்டிஸ் தெரிவானார்.  

இந்த போட்டியில் வெற்றியீட்டி தொடரை வசப்படுத்திய இலங்கை அணி சொந்த மண்ணில் 6ஆவது தொடர்ச்சியான தொடர் வெற்றியை பதிவு செய்தது. மேலும் சொந்த மண்ணில் 10 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக ஒரே வருடத்தில் 5 தொடர்களை இலங்கை தனதாக்கிக்கொண்டுள்ளது விசேட அம்சமாகும்.