சிம்பாப்வேவுக்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான்

60 Views
Editor: 0

சிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்களினால் வெற்றியீட்டி தொடரை சமநிலைப்படுத்தியுள்ளது. .

சிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்களினால் வெற்றியீட்டி தொடரை சமநிலைப்படுத்தியுள்ளது. 

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் சிம்பாப்வே வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே வெறும் 32.3 ஓவர்களில் 145 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

146 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் வெறும் 18.2 ஓவர்களியே விக்கெட் இழப்பின்றி அபார வெற்றி பெற்றது. சதமடித்து அசத்திய சைம் அயூப் 113 ரன்களை குவித்தார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது. தீர்மானமிக்க மூன்றாவது போட்டி இன்று (28) புலவாயோவில் நடைபெறுகிறது.