மக்கட்தொகை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகரிக்கிறது அந்தளவிற்கு பிராய்லர் கோழியின் தேவையும் அதிகரிக்கிறது.
அதனால் கோழிகளுக்கு சில மருந்துகளை கொடுத்து வெறும் 40 இருந்து 45 நாட்களில் 1 கிலோ அளவிற்கு வளர வைத்து அதனை விற்பனைக்கு விடுகிறார்கள். இந்த நிலையில் இதனை இன்னும் அதிகப்படுத்த கோழியின் வளர்ச்சியை இன்னும் வேகமாக வளர வைக்க முயற்சி செய்வதன் மூலமாக கோழிகள் கடுமையாக நோய் தாக்குதலுக்கு பாதிப்படைந்துள்ளது.
கோழி வெறும் 20 நாட்களில் வளர வேதிப் பொருள்களைப் பயன்படுத்தியதன் காரணமாக கோழிகளுக்கு தசை வீக்கம், கேன்சர் உள்ளிட்ட பல நோய்கள் தாக்கி இருப்பதாக கோழி வளர்ப்பவர்கள் கண்டறிந்துள்ளார்கள். ஆனால் அதை அழிக்காமல் பழைய கோழிகளுடன் கலந்து விற்பனை செய்துள்ளார்கள் நாடு முழுக்க, இதை உண்ணும் மனிதர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும் என கூறுகிறார்கள்.
எனவே அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு பிராய்லர் கோழிகளை வாங்க வேண்டாம் என வாட்ஸ்அப் உள்ளிட்ட பல சமூக வலைதளத்தில் செய்திகள் பரவி வருகிறது.