இந்திய கடற்படை தினம்- கடற்படையினருக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

436 Views
Editor: 0

இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படையினருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்..

புதுடெல்லி:

 

இந்திய கடற்படை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னம் அலங்கரித்து வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டுவருகிறது. 

 

போர் நினைவுச் சின்னத்தில் கடற்படை தளபதி கரம்பீர் சிங் மற்றும் கடற்படை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

 

 

போர் நினைவுச்சின்னத்தில் மரியாதை செலுத்திய கடற்படை தளபதி

 

கடற்படை தினத்தையொட்டி கடற்படை வீரர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

 

ஜனாதிபதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘கடற்படை தினத்தில், இந்திய கடற்படையின் அனைத்து அதிகாரிகள், கடற்படையில் பணியாற்றும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நமது கடல் எல்லைகளை பாதுகாப்பலும், நமது வர்த்தக பாதைகளைப் பாதுகாப்பதிலும் மற்றும் அவசர காலங்களில் உதவி செய்வதிலும் உங்களின் அர்ப்பணிப்பு குறித்து நாடு பெருமிதம் கொள்கிறது. தண்ணீரில் உங்கள் பணி தொடரட்டும். ஜெய் ஹிந்த்!’ என கூறியுள்ளார்.

 

‘தைரியமான நமது கடற்படை வீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம். அவர்களின் சேவையும் தியாகமும் நாட்டை வலுவானதாகவும் பாதுகாப்பாகவும் மாற்றி உள்ளது’ என பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.