சுந்தர் சி படத்துக்கு சென்சாரில் 20 வெட்டு

317 Views
Editor: 0

வி.இசட் துரை இயக்கத்தில் சுந்தர் சி ஹீரோவாக நடிக்கும் இருட்டு படத்தில் இருந்து 20 காட்சிகளை சென்சாரில் வெட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

சாக்‌ஷி, தன்ஷிகா, விமலா ராமன், விடிவி.கணேஷ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். பயமுறுத்தும் காட்சிகள் அதிகமாக இருந்ததால் சென்சாரில் ஏ சான்றிதழ் தான் தருவோம் என்றார்கள். 20 காட்சிகளை வெட்டி யூ/ஏ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். அடுத்து அமீர் நடிப்பில் நாற்காலி படத்தை இயக்கி வருகிறேன். அதற்கு அடுத்து சிம்புவுடன் இணைய இருக்கிறேன். அது தொட்டி ஜெயா 2 அல்ல. வேறு ஒரு கதை. தொட்டி ஜெயா 2 கண்டிப்பாக வரும்.