உலக நாயகன் என்று தன்னை அழைக்க வேண்டாம் என்று நடிகர் கமல்ஹாசன் இரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் தனது 6 வயதில் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்து 64 ஆண்டுகளில் 230இற்கும் அதிகமான படங்களில் நடித்த கமல்ஹாசனுக்கு தெனாலி திரைப்படத்தில் அவருக்கு ”உலக நாயகன்” பட்டம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
அதில், “என் மீது கொண்ட அன்பினால் 'உலக நாயகன்' உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள். மக்கள் கொடுத்து, சக கலைஞர்களாலும் ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட பாராட்டுச் சொற்களால் மகிழ்ந்திருக்கிறேன்; உங்கள் இந்த அன்பால் நெகிழ்ந்துமிருக்கிறேன்.
ஆகவே, என் மீது பிரியம் கொண்ட அனைவருக்குமாக ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இனிவரும் காலத்தில் என் ரசிகர்களும் ஊடக நண்பர்களும் திரைத்துறையைச் சார்ந்தவர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்களும், சக இந்தியர்களும் என்னை கமல்ஹாசன் என்றோ கமல் என்றோ KH என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்று கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.