எனது உடல்நிலையால் ஏ.ஆர்.ரகுமானின் பணிகள் பாதிக்கப்பட்டு விட கூடாது என்பதற்காக பிரிந்து வாழ முடிவெடுத்தேன் என ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 2 மாதமாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறேன். எனது உடல்நல கோளாறு யாருக்கும் பிரச்சினையாக இருந்துவிட கூடாது.
எனது உடல்நிலையால் ஏ.ஆர்.ரகுமானின் பணிகள் பாதிக்கப்பட்டு விட கூடாது என்பதற்காக பிரிந்து வாழ முடிவெடுத்தேன்.
எங்கள் பிரிவு குறித்து யாரும் தவறான, கீழ்தரமான கருத்துக்களை பரப்ப வேண்டாம். ஏ.ஆர்.ரகுமான் உலகிலேயே தலைசிறந்த மனிதர். எங்கள் இருவருக்கும் தற்காலிகமாக ஒரு இடைவெளி தேவைப்பட்டதால் பிரிந்து இருக்கிறோம்.
எதையும் நாங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதும் விரைவில் சென்னை திரும்புவேன். எனத் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.