'யார் எதைச் சொல்லி டிரம்பை சாடலாம்': திட்டமிடும் ஜனநாயகக் கட்சி!

வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் நவ., 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அமெரிக்க குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

ஆந்திராவில் 10 நாளில் மூன்றிலிருந்து 4 லட்சமானது பாதிப்பு:

அமராவதி: ஆந்திராவில் நேற்று (ஆக., 28) ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு, நான்கு லட்சமானது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நிர்வாகக்குழு உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதி:

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. ஆராய்ச்சிப் படிப்பிற்கான விண்ணப்ப பதிவு தேதி நீட்டிப்பு:

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பிற்கான விண்ணப்ப பதிவு தேதி செப். 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடன் தவணையை செலுத்தும் கால அவகாசம் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குப்பின் நீட்டிக்க வாய்ப்பில்லை - ரிசர்வ் வங்கி

மும்பை: கொரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் ஏற்பட்ட சிரமங்களைக் கருத்தில் கொண்டு கடன் தவணையை செலுத்தும் கால அவகாசம் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 31-ம் தேதிக்குப்பின் நீட்டிக்கப்படாது என்று ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.