மாநிலம் முழுதும் நாளை (ஆக. 2) தளர்வில்லா முழு ஊரடங்கு

சென்னை :தமிழகம் முழுதும், தளர்வுகள் எதுவும் இல்லாத, முழு ஊரடங்கு நாளை அமல்படுத்தப்பட உள்ளது.தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை தடுக்க, இம்மாதம், 31ம் தேதி வரை, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 11 லட்சத்தை நெருங்கியது

புதுடில்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 57,117 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16.95 லட்சத்தை தாண்டியது. இதுவரை 10,94,374 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

ஆந்திராவில் கிரேன் சரிந்து விழுந்து 10 பேர் பலி

விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ஹிந்துஸ்தான் கப்பல்கட்டும் தளத்தில் கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர்.

வேறு செயலியை பயன்படுத்த யோசனை:

வேறு செயலியை பயன்படுத்த யோசனை: சீன நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க திட்டம்...அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

இந்தியாவிற்கு சாதகமானது: 3 லட்சம் நேரடி வேலை வாய்ப்புகள் உருவாக்கும்.

இந்தியாவிற்கு சாதகமானது: 3 லட்சம் நேரடி வேலை வாய்ப்புகள் உருவாக்கும்...பி.எல்.ஐ திட்டம் குறித்து மத்தியமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம்.!!!

5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம்

5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.  3 ஆண்டு சட்டப்படிப்பு, முதுகலை சட்டமேற்படிப்புக்கான விண்ணப்பம் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.