ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு பயணிக்க பாஸ்போர்ட், விசா ஆகியவை தேவைப்படும். ஒரு நாட்டுக்கு என்ன காரணத்துக்காக செல்கிறோமோ அதற்கேற்ப விசா பெற்றுக் கொள்ளலாம். அதே சமயம் வெளிநாட்டினரை ஈர்க்க சில நாடுகள் விசா இல்லாமல் பயணிக்க அனுமதி வழங்கி வருகிறது.
நமது நாடான இலங்கையில் கூட சுற்றுலா வருவதற்கு இந்தியா உள்பட 35 நாடுகளைச் சேர்ந்தோர் விசா இல்லாமல் பயணிக்கலாம் என இலங்கை அரசு சமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில், மற்றொரு நாடான சீனாவும் புதிதாக 9 நாடுகள் விசா இன்றி அந்நாட்டிற்குள் பயணிக்கலாம் என அறிவித்துள்ளது.
அதன்படி ஜப்பான், பல்கேரியா, ருமேனியா, மால்டா, குரோசியா, மாண்டினீக்ரோ, வடக்கு மாசிடோனியா, எஸ்டோனியா, லாட்வியா ஆகிய நாடுகளுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்தார்
இப்படி பயணம் மேற்கொள்பவர்கள் 30 நாள் வரை சீனாவில் தங்கிக் கொள்ளலாம். இதன்மூலம் சீனாவுக்கு விசா இன்றி பயணம் மேற்கொள்ளும் நாடுகளின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.