விரைவில் இந்தியா வரும் விவோ எக்ஸ்50 சீரிஸ்

67 Views
Editor: 0

விவோ நிறுவனம் தனது எக்ஸ்50 சீரிஸ் ஸ்மார்ட்போன்களான- எக்ஸ்50, எக்ஸ்50 ப்ரோ மற்றும் எக்ஸ்50 ப்ரோ பிளஸ் மாடல்களை கடந்த மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்தது.  .

                         விவோ எக்ஸ் சீரிஸ் டீசர்
 

விவோ நிறுவனம் தனது எக்ஸ்50 சீரிஸ் ஸ்மார்ட்போன்களான- எக்ஸ்50, எக்ஸ்50 ப்ரோ மற்றும் எக்ஸ்50 ப்ரோ பிளஸ் மாடல்களை கடந்த மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்தது. சீன அறிமுக நிகழ்விலேயே இந்த ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. 

அந்த வகையில், விவோ நிறுவனம் தனது எக்ஸ்50 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் விரைவில் இந்தியாவில் வெளியாக இருப்பதை உணர்த்தும் வகையில் டீசர்களை வெளியிட்டு இருக்கிறது. 
விவோ டீசரின் படி புதிய விவோ எக்ஸ்50 சீரிஸ் ஸ்மார்ட்போனின் கேமரா அதிநவீன அம்சங்களை வழங்கும் என தெரியவந்துள்ளது. எனினும், விவோ எக்ஸ்50, எக்ஸ்50 ப்ரோ மற்றும் எக்ஸ்50 ப்ரோ பிளஸ் என மூன்று மாடல்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்யுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

விவோ எக்ஸ்50 ப்ரோ ஸ்மார்ட்போன் ஃபிளாக்ஷிப் தர பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது. இத்துடன் விவோ எக்ஸ்50 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் 5ஜி வசதி வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் ஸ்னாப்டிராகன் 765ஜி சிப்செட் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் விவோ எக்ஸ்50 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளியாக இருக்கும் ஒப்போ ரெனோ 4, ஒன்பிளஸ் இசட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. விவோ எக்ஸ்50 ப்ரோ பிளஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.