இணையத்தில் லீக் ஆன சாம்சங் விளம்பர வீடியோ

22 Views
Editor: 0


சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ஃப்ளிப் 5ஜி ஸ்மார்ட்போன் விளம்பர வீடியோ இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. .

ட்விட்டரில் லீக் ஆகி இருக்கும் வீடியோவின் படி கேலக்ஸி இசட் ஃப்ளிப் 5ஜி தோற்றத்தில் எந்த மாற்றங்களையும் கொண்டிருக்காது என தெரிகிறது. எனினும், இந்த ஸ்மார்ட்போனில் புதிய சிப்செட் வழங்கப்பட இருக்கிறது. கேலக்ஸி இசட் ஃப்ளிப் 5ஜி வெர்ஷன் மிஸ்டிக் பிரான்ஸ் எனும் புதிய நிறத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

கேலக்ஸி இசட் ஃப்ளிப் 5ஜி

மேலும் புதிய ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த ஸ்மார்ட்போன் 4ஜி வெர்ஷனை விட 0.5mm தடிமனாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் ஸ்மார்ட்போனின் அளவுகளில் மாற்றங்கள் இருக்கும் என தெரிகிறது.

 

முன்னதாக கேலக்ஸி இசட் ஃப்ளிப் 5ஜி ஸ்மார்ட்போன் சாம்சங் ஹங்கேரி அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருந்தது. அதில் இந்த ஸ்மார்ட்போன் SM-F707B எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இதே மாடல் நம்பர் கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் கடந்த மாதம் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

சாம்சங் ஹங்கேரி வலைதளத்தில் சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப் 5ஜி விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. எனினும், இது விரைவில் அறிமுகமாகும் என்பதை மட்டும் உணர்த்தியது.