ரியல்மி எக்ஸ்2 புதிய வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்

14 Views
Editor: 0

ரியல்மி பிராண்டு தனது ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது..

                                ரியல்மி எக்ஸ்2

 

ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன்- 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. 

 

அந்த வரிசையில் தற்சமயம் 256 ஜிபி மெமரி வேரியண்ட் இணைந்துள்ளது. புதிய வேரியண்ட் பியல் புளூ, பியல் வைட் மற்றும் பியல் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கும் என ரியல்மி தெரிவித்து உள்ளது. ரியல்மி எக்ஸ்2 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விற்பனை ஜூலை 21 ஆம் தேதி இரவு 8 மணிக்கு துவங்குகிறது.

 ரியல்மி எக்ஸ்2

 

சிறப்பம்சங்களை பொருத்தவரை ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் FHD+AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

 

புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.25, 2 எம்.பி. டெப்த் சென்சார், 2 எம்.பி. மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 3D கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வழங்கப்பட்டுள்ளது. 

 

இத்துடன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் VOOC 4.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.