கூகிள் பே தளத்தில் ‘Tap & Pay’ NFC அம்சத்திற்கு டெபிட் / கிரெடிட் கார்டுகளை சேர்ப்பது எப்படி

24 Views
Editor: 0

கூகிள் தனது கூகிள் பே கணக்கு வழியாக பணம் செலுத்துவதை எளிதாக்க திட்டமிட்டுள்ளது. ஏனெனில், இது NFC அடிப்படையிலான ‘Tap & Pay’ கட்டண முறையை உருவாக்கி வருகிறது. .

கூகிள் பே தளத்தில் ‘Tap & Pay’ NFC அம்சத்திற்கு டெபிட் / கிரெடிட் கார்டுகளை சேர்ப்பது எப்படி?

 

கூகிள் தனது கூகிள் பே கணக்கு வழியாக பணம் செலுத்துவதை எளிதாக்க திட்டமிட்டுள்ளது. ஏனெனில், இது NFC அடிப்படையிலான ‘Tap & Pay’ கட்டண முறையை உருவாக்கி வருகிறது. இதற்காக, ஒருவர் தனது கிரெடிட் அல்லது டெபிட் கார்டை Google Pay இல் சேர்க்க வேண்டும். 

கூகிள் இந்த அம்சத்தை வரையறுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே வழங்குவதால், எத்தனை பேர் ஏற்கனவே அதைப் பெற்றுள்ளனர் என்பதும், அனைத்து Android அல்லது iOS பயனர்களுக்கும் எப்போது முழுமையாக வெளியாகும் என்பது குறித்தும் எந்த தகவலும் இல்லை. அமைப்புகளின் கீழ் கார்டுகளைச் சேர்ப்பதற்கான இந்த விருப்பத்தை நீங்கள் கண்டால், நீங்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலி தான்.

சரி, உங்கள் கார்டை Google Pay இல் பதிவு செய்வது எப்படி? என்பதை எளிமையாகப் பார்க்கலாம் வாங்க:

  • உங்கள் மொபைல் சாதனத்தில், Google Pay பயன்பாட்டைத் திறக்கவும்.
  • Tap Settings > Payment methods > Add card எனும் தேர்வுகளை வரிசையாகத் தேர்வு செய்யவும்.
  • கார்டு நம்பர், காலாவதி தேதி (Expiry Date), CVV எண் மற்றும் அட்டைதாரரின் பெயர் மற்றும் பில்லிங் முகவரியை உள்ளிடவும்.
  • விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.
  • நீங்கள் எவ்வாறு சரிபார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்க.
  • OTP எண்ணை உள்ளிடவும்.
  • உங்கள் புதிய கார்டின் கட்டண முறை பட்டியலுக்கு அடுத்ததாக உள்ள Activate எனும் விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் Google கட்டணக் கணக்குடன் தொடர்புடைய தொலைபேசி எண்ணுக்கு உரைச் செய்தி வழியாக நீங்கள் பெறும் OTP எனப்படும் ஒரு முறை கடவுச்சொல்லை உள்ளிடவும்.
  • உறுதிப்படுத்தலை ஏற்றுக்கொள்ளுங்கள்.
  • இது NFC இயக்கப்பட்ட டெர்மினல்களில் ‘Tap & Pay’ பயன்முறையில் பணம் செலுத்த அனுமதிக்கும்.

நீங்கள் Google Pay இலிருந்து ஒரு கார்டை அகற்ற விரும்பினால், நீங்கள் பயன்பாட்டைத் திறந்து, settings > Payment Methods and then Remove card எனும் ஆப்ஷன்களைத் தேர்வு செய்வதன் மூலம் கார்டை அகற்ற முடியும். Google Pay இலிருந்து உங்கள் கார்டை அகற்றுவது உங்களுக்கான அனைத்து வகையான டோக்கன் செய்யப்பட்ட கார்டு கட்டணங்களையும் தானாகவே முடக்கும் என்பதையும் நினைவில் கொள்க.

தொழில்நுட்பச் செய்திகள்