ஏடிஎம் கார்டுகளில் நாம் செய்யும் சிறுதவறால், மொத்த பணத்தையும் வழிச்சுட்டு போக காத்திருக்கும் கண்கொத்தி பாம்புகள்! அசால்ட்டாக விட்டு பின்னர் புலம்பாதீர்கள்!
தற்செயலாக செல்போனிற்கு வந்த மெசேஜ்களை நோட்டம் விட்டு கொண்டிருந்த போது, ஒரு வாரத்திற்கு முன்னர் ஒரு மெசேஜ் வந்துள்ளது. அப்போது சரியாக பார்க்க வில்லை போல, இப்போது பார்த்த உடன் பக்கென இருந்தது. ஏதோ ஒரு ஹோட்டலில் நான் சாப்பிட்டதாக ஆயிரம் ரூபாய்க்கு மேல் வந்த பில்லுடைய மெசேஜ் அது. அதற்கு முன்னரும் ஒரு மெசேஜ், ஏதோ ஒரு கடையில் துணி எடுத்ததாக பில் செய்தி. என்னய்யா ஹோட்டலிலும் சாப்பிடவில்லை, ஷாப்பிங் போகவில்லை. பில்லிற்கு உண்டான செய்தி மட்டும் வந்துள்ளதே என தேடிய பின்னர் தான் புரிந்தது. நமது கடன் அட்டை விபரம் எவனாலோ களவாடப்பட்டது என்பது!
நெஞ்சில் படபடப்பு தொற்றிக்கொள்ள உடனே வங்கிக்கு விஷயத்தை சொல்ல, அவர்கள் எனது புகாரை பதிவு செய்து கொண்டார்கள். உடனே அட்டையை ப்ளாக் செய்து புதிய அட்டையை அனுப்பினார்கள். அலட்சியத்தால் அந்த மெசேஜ்களை பார்க்காமல் இருந்தால், மொத்தமாக தேய்த்து இருப்பார்கள். இந்த பாடத்தை அடுத்து ஏடிஎம், கிரிடிட் கார்ட் போன்றவற்றை எவ்வளவு பாதுகாப்பாக உபயோகிக்கலாம் என்பதை கற்றுக்கொண்டேன்.
அதன்படி, ஏடிஎம் கார்டு பயன்படுத்தும் போது முடிந்தவரை அந்த கார்டு உள்ள வங்கியின் ஏடிஎம் மெஷின்களில் மட்டும் பயன்படுத்தவும். ஏதாவது தவறு நடந்துவிட்டால் கூட எளிதாக புகார் செய்ய முடியும். வேறு ஏடிஎம் மெஷின் பயன்படுத்துகிறீர்கள் என்றால், பணத்தை எடுத்து முடித்த பின்னர் தொடர்ச்சியாக 1245678990 இது போன்ற ஏதாவது ஒரு எண்ணை டைப் செய்து விட்டு வந்துவிடுங்க.
ஏதாவது கடைகளில் நீங்க ஷாப்பிங் செய்த பின்னர், கார்டு கொண்டு ஸ்வைப் செய்வதாக இருந்தால் உங்க கண் முன்னே கார்டை தேய்க்க சொல்லுங்கள். ஸ்வைப் மெஷின் பிரச்சனை சொல்லி நிறைய பேர் இருமுறை கார்டை தேய்ப்பார்கள். இருமுறை பணம் எடுக்கப்பட்டது என்று, மிகவும் லேட்டாக மெசேஜ் வரும். கண்ணியமான கடை ஓனர் என்றால், அந்த இரண்டு மெசேஜ் பார்த்ததும் இருமுறை கார்டை தேய்த்ததால் தான், இந்த பிரச்சனை வந்துள்ளது என்பதை புரிந்து கொண்டு பணத்தை கொடுத்து விடுவார்கள். இல்லையெனில் சண்டை போட்டு தான் வாங்க வேண்டும்.
ஏடிஎம் கார்டு நம்பர் மற்றும் இன்டர்நெட் பேங்கிங் பயன்படுத்துபவர்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை கடவு சொல்லை மாற்றவும். வங்கியில் மெசேஜ் அலார்ட் என்ற சேவை உள்ளது. அதனை கண்டிப்பாக பயன்படுத்துங்கள். இதற்காக வங்கி நம்மிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை எடுக்கும் அதற்கு பயந்து இந்த சேவையை பலர் பயன்படுத்தாமல் உள்ளனர். எங்கு யார் நம்முடைய கார்டை பயன்படுத்தினாலும், மெசேஜ் வந்து அலார்ட் செய்து விடும்.
அடுத்து, உங்களுக்கு நீங்க தொடர்பான வங்கியில் இருந்து போன் செய்கிறோம் என கூறிக்கொண்டு யாரவது உங்களது தகவலை கேட்டால் உடனே அந்த வங்கியை அணுகி உறுதி செய்துகொள்ளுங்கள். அதுவரை யாரிடமும் உங்களது தகவலை பகிர்ந்து கொள்ளவேண்டாம்.
சிலர் வாட்ஸ்அப்களில் புது எண்ணிலிருந்து மெசேஜ் செய்து ஒரு ஆறிலக்க ஓடிபி எண்ணை உங்களுக்கு அனுப்பி இருப்பார்கள். உடனே ஒரு போன்கால் வரும். தவறுதலாக உங்களுக்கு அந்த ஓடிபி எண் வந்துவிட்டது. சற்று அந்த ஓடிபி எண்ணை கூற முடியுமா என்பார்கள். அதையெல்லாம் நம்பி ஏமாந்து விடாதீர்கள். ஓடிபி எண்ணை சொல்லிவிட்டால் உங்களது போனில் உள்ள எல்லா விபரமும் அவர்கள் கையில். இதன் மூலம் பேங்க் அக்கவுண்டுகளும் ஹேக் செய்யப்படுவதாக ஒரு தகவல் கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபரே போன் செய்து கேட்டால் கூட உங்கள்து விபரம் குறித்து வாய் திறக்க கூடாது. உதவி செய்கிறேன் என டிஜிட்டல் தி ருட்டிற்கு ப லியாகி விடாதீர்கள். ஆன்லைன் பண பரிமாற்றம் செய்பவர்கள் உங்களது ப்ரவுசரில் லாக் ஐகான் உள்ளதா என்பதை உறுதிபடுத்தி கொண்டு உபயோகிக்கவும். அப்படி இருந்தால் அது என்கிரிப்ஷன் தொழில்நுட்பம், ஆதலால் நம்ம பக்கம் தைரியமாக இருக்கலாம். குறிப்பாக மற்றவர்கள் கம்ப்யூட்டரில் உங்களது பண பரிவர்த்தனை செய்யாதீர்கள். முக்கியமாக public wifi வசதியை பயன்படுத்துவதை தவிருங்கள். டிஜிட்டல் தி ருட்டு நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதன் வலையில் சிக்காமல் இருக்க அடிக்கடி உங்களது பண இருப்பை கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும். பாடுபட்டால் மட்டும் போதுமா? பாடுபட்ட சம்பாத்தியத்தை பாதுகாக்க வேண்டாமா?