உன்னால தான் முடியுமா நாங்களும் செய்வோம்! அமேசானுக்கு சவால் விடும் வால்மார்ட்!
அமேசான் சமீபத்தில் ட்ரோன்கள் மூலம் தங்கள் விநியோகங்களை துவங்கியதை அடுத்து, அதற்கு போட்டியாக வால்மார்ட் நிறுவனம் மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை தானியங்கி ட்ரோன்கள் மூலம் வழங்குவதற்கான ஒரு முயற்சி திட்டத்தைத் துவங்க உள்ளது. தொடக்கம் முதல் இறுதி வரையிலான விநியோகத்தை ஃப்ளைட்ரெக்ஸ் உடன் இணைந்து, US சில்லறை விற்பனையாளர் ஆன வால்மார்ட் மேம்படுத்தப் போவதாகவும் தெரிகிறது.
வட கரோலினாவின் ஃபாயெட்டெவிலேவில் புதன்கிழமை அன்று சோதனைகள் துவங்கியதாகவும் கிளவுட் கட்டுப்பாட்டு ட்ரோன்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களை எடுத்துச்சென்று விநியோகம் செய்வதாக ஆர்கன்சாஸ் சேர்ந்த வால்மார்ட் கூறியது.
ட்ரோன் மூலம் மில்லியன் கணக்கான தொகுப்புகள் வழங்கப்படுவதைக் காண்பதற்கு சில காலம் ஆகும் என்று எங்களுக்குத் தெரியும். இந்த வான்வழி விநியோக முறை இன்னும் கொஞ்சம் அறிவியல் புனைகதைகளைப் போலவே உணர்கிறது’ என்று வாடிக்கையாளர் தயாரிப்புகளின் மூத்த துணைத் தலைவர் டாம் வார்ட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
COVID-19 தொற்றுநோயை எதிர்கொள்ளும் அதே வேளையில் நிறுவனம் அதன் பிக்-அப் மற்றும் டெலிவரி சேவைகளின் விரிவாக்கத்தை துரிதப்படுத்தியுள்ளது, ஏனெனில் தொற்று பரவல் குறித்த பயம் நுகர்வோர் இடையே இருப்பதால் வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டு வாசலிலேயே பொருட்களை பெறுவதையே அதிகளவில் விரும்புகிறார்கள்.
இரண்டாவது காலாண்டில் அமெரிக்க ஆன்லைன் விற்பனையை இரட்டிப்பாகிய வால்மார்ட், இதற்கு முன்பு ஃபோர்டு மோட்டார் கோ மற்றும் சுய-ஓட்டுநர் வாகன தொடக்க நிறுவனங்களான கட்டிக் (Gatik) மற்றும் நியூரோ (Nuro) உடன் தானியங்கி வாகனங்கள் மூலம் விநியோகங்களை முயற்சிக்கவும் திட்டங்களைக் கொண்டுள்ளது.