விரைவில் இந்தியா வரும் 30 வாட் டார்ட் சார்ஜிங் கொண்ட ரியல்மி 10000 எம்ஏஹெச் பவர்பேங்க்

34 Views
Editor: 0

ரியல்மி பிராண்டின் புதிய 30 வாட் டார்ட் சார்ஜிங் வசதி கொண்ட 10000 எம்ஏஹெச் பவர்பேங்க் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது..

                               ரியல்மி

ரியல்மி பிராண்டு மே மாத வாக்கில் 30 வாட் இருவழி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 10000 எம்ஏஹெச் பவர் பேங்க் மாடலை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த பவர் பேங்க் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. 30 வாட் டார்ட் சார்ஜ் பவர் பேங்க் ரியல்மி இந்தியா வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. 

ரியல்மி இந்தியா சப்போர்ட் பக்கத்தில் 10000 எம்ஏஹெச் 30 வாட் டார்ட் சார்ஜ் பவர் பேங்க் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இந்த பவர் பேங்க் RMA156 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. புதிய பவர் பேங்க் சரியான வெளியீட்டு தேதி பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.

 ரியல்மி  பவர் பேங்க்

 

எனினும், வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து இதன் வெளியீடு விரைவில் துவங்கும் என கூறப்படுகிறது. சீனாவில் இந்த பவர்பேங்க் விலை 199 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 2115 எனநிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய பவர் பேங்க் வெளியீட்டு விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. 

ரியல்மி 10000 எம்ஏஹெச் 30 வாட் டார்ட் சார்ஜ் பவர் பேங்க் 18 வாட் பவர் பேங்க் மாடலை விட 53 சதவீதம் வேகமாக சார்ஜ் செய்யும். மேலும் இதை கொண்டு 30 வாட் வூக் மற்றும் டார்ட் சார்ஜ் சாதனங்களை சார்ஜ் செய்ய முடியும்.