பஜாஜ் பல்சர்
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சர் 150 பிஎஸ்6 மாடல்களின் விலையை இந்திய சந்தையில் மீண்டும் உயர்த்தி இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிள் வேரியண்ட்கள் தற்சமயம் ரூ. 999 விலை அதிகமாகி இருக்கிறது. பல்சர் நியோன், சிங்கிள் டிஸ்க் மற்றும் ட்வின் டிஸ்க் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
விலை உயர்வின் படி பஜாஜ் பல்சர் நியோன் மாடல் ரூ. 999 விலை உயர்த்தப்பட்டு தற்சமயம் ரூ. 91,386 என்றும் சிங்கள் டிஸ்க் மாடல் ரூ. 998 உயர்த்தப்பட்டு ரூ. 95,430 என்றும் ட்வின் டிஸ்க் மாடல் விலை ரூ. 999 உயர்த்தப்பட்டு ரூ. 99,565 என மாறி இருக்கிறது. இந்தியாவில் பல்சர் மாடல்களின் விலை இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.
பஜாஜ் பல்சர் 150 மாடலில் 150சிசி, சிங்கிள் சிலிண்டர், SOHC, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 13.8 பிஹெச்பி பவர், 13.25 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்குகிறது.