ஹோண்டா லிவோ பிஎஸ்6 டிஸ்க் பிரேக் விலை வெளியீடு

44 Views
Editor: 0

ஹோண்டா நிறுவனத்தின் புதிய லிவோ பிஎஸ்6 டிஸ்க் பிரேக் மோட்டார்சைக்கிள் மாடலின் விலை வெளியாகி உள்ளது..

ஹோண்டா லிவோ பிஎஸ்6 டிஸ்க் பிரேக் விலை வெளியீடு:

ஹோண்டா நிறுவனத்தின் புதிய லிவோ பிஎஸ்6 டிஸ்க் பிரேக் மோட்டார்சைக்கிள் மாடலின் விலை வெளியாகி உள்ளது.

 

ஹோண்டா நிறுவனம் தனது லிவோ பிஎஸ்6 டிஸ்க் பிரேக் வேரியண்ட்டின் விலையை அறிவித்து இருக்கிறது. அதன்படி புதிய டிஸ்க் பிரேக் வேரியண்ட் விலை ரூ. 74,256, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

 

இந்தியாவில் லிவோ பிஎஸ்6 வேரியண்ட் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இந்த மோட்டார்சைக்கிள் டிரம் பிரேக் வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதன் விலை ரூ. 70,056, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

 ஹோண்டா லிவோ பிஎஸ்6

டிரம் பிரேக் வேரியண்ட்டில் முன்புறம் 130 எம்எம் டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. புதிய டிஸ்க் பிரேக் வேரியண்ட்டில் 240 எம்எம் டிஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் சிபிஎஸ் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.

 

ஹோண்டா தனது லிவோ மாடலில் என்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் / ஸ்விட்ச், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்ட அம்சங்களை வழங்கி உள்ளது. இந்த மோட்டார்சைக்கிளில் 110 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 8.6 பிஹெச்பி பவர், 9.3 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது