உங்கள் வீட்டில் தன, தானியத்திற்கு பஞ்சமே வராது. 

29 Views
Editor: 0

வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால், நாம் தொட்டதெல்லாம் வீண்விரயம் ஆகக்கூடாது. தொட்டதெல்லாம் விரயமாகக் கூடாது என்றால்! நாம் எடுக்கக்கூடிய எல்லா காரியங்களும் வெற்றி பாதையை நோக்கி செல்ல வேண்டும்..

உங்கள் வீட்டில் தன, தானியத்திற்கு பஞ்சமே வராது. தொட்டதெல்லாம் வீண் விரயம் ஆகாமல் இருக்க உச்சரிக்க வேண்டிய வரிகள்!

வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால், நாம் தொட்டதெல்லாம் வீண்விரயம் ஆகக்கூடாது. தொட்டதெல்லாம் விரயமாகக் கூடாது என்றால்! நாம் எடுக்கக்கூடிய எல்லா காரியங்களும் வெற்றி பாதையை நோக்கி செல்ல வேண்டும். அப்படி சென்றாலே போதும். வீட்டில் தன தானியத்திற்கு, குறைவிருக்காது. செல்வத்தையும், மகாலட்சுமியின் அருளையும், மனநிறைவான வாழ்க்கையையும், பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? ஒரே வழி இறைவழிபாடு தான். இரண்டாவது வழி நேர்வழியில் செல்ல வேண்டும். குறுக்குப்பாதை கூடவே கூடாது. குறுக்குப் பாதையில் சென்று நாம் பெரும் வெற்றியானது கட்டாயம் நிலைத்திருக்காது. இறைவழிபாடு என்று சொல்லும்போது சிவனடியார்கள், குறிப்பாக நமக்காக விட்டுச் சென்றுள்ள பாடல்கள் ஏராளம். அந்தப் பாடல்களில், ஒரு பாடல் வரியை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Thirugnana-sambandarபூலோகத்தில் மக்கள் பஞ்சத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில், திருஞானசம்பந்தர், திருவீழிமிழலை என்னும் சிவனுடைய திருத்தலத்தில், இந்த பாடலைப் பாடி, இறைவனிடமிருந்து செல்வத்தினை பெற்று, மக்களின் பஞ்சத்தைப் போக்கினார். இச்சிவாலயத்தின் மூலவர் வீழிநாதேஸ்வரர். தாயார் சுந்தரகுசாம்பிகை. மக்கள் பசி பட்டினி இல்லாமல், நிறைவான சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வதற்காக, திருஞானசம்பந்தரால் எழுதப்பட்ட பாடல்தான் இது.

தினம்தோறும் காலையில் எழுந்து இந்தப் பாடலை ஒருமுறையாவது உச்சரித்தால், உங்களைத் தேடி செல்வம் வரும். உங்கள் வீட்டில் நிம்மதி நிலைத்திருக்கும். குறிப்பாக உங்கள் கையில் இருக்கும் பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்கும். உங்களது மனது தூய்மை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது. சிவபெருமானின் திருவடிகளை சரணடையவும் இந்த மந்திரம் உறுதுணையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கான திருஞானசம்பந்தர் பாடிய பாடல் வரிகள் இதோ!

Thirugnana-sambandar1வாசி தீரவே, காசு நல்குவீர்

மாசின் மிழலையீர், ஏச லில்லையே

இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்

கறைகொள் காசினை, முறைமை நல்குமே.

செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்

பைகொள் அரவினீர், உய்ய நல்குமே.

நீறு பூசினீர், ஏற தேறினீர்

கூறு மிழலையீர், பேறும் அருளுமே.

காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்

நாம மிழலையீர், சேமம் நல்குமே.

sivan-4தினம்தோறும் இந்தப் பாடலை பாட முடியாதவர்கள், வெள்ளிக்கிழமையில் மட்டுமாவது ஒரே ஒரு முறை உச்சரிப்பது நல்லது. உங்களுக்கு தெரிந்தவர்கள், எழுதப்படிக்கத் தெரியாதவர்கள், உங்களின் உறவினர்கள், யாரேனும் இருந்தால், அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், இந்த பாடலை ஒரு காகிதத்தில் எழுதி, கொஞ்சம் மஞ்சள் குங்குமம் வைத்து, பூஜை அறையில் வைத்து பூஜித்து வர சொல்லுங்கள். அதற்கும் பலன் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. எந்த ஒரு மந்திரத்தையும், பாடல் வரிகளையும் நம்பிக்கையோடு உச்சரித்தாலே வாழ்க்கையில் துன்பம் என்பது பறந்தோடி விடும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.