கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் தொலைதூரப் பயணம் செய்ய வேண்டாம் மருத்துவர்கள் கூறுவார்கள். இது ஏன் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.
கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்?
கர்ப்ப காலத்தில் பெண்கள் ஒரு சில விஷயங்களை செய்யலாம். ஒரு சில விஷயங்களை செய்ய கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள். இதற்கு பின்னால் எல்லாம் ஒரு முக்கிய காரணம் இருக்க தான் செய்கிறது. கர்ப்பமாக உள்ள பெண்கள் பயணம் செய்யலாமா என்று கேள்வி பலருக்கும் இருக்கும் ஒன்று தான்.
வீட்டிற்குள்ளேயே கர்ப்ப காலத்தில் அடைந்து கிடைப்பதும் இயலாத ஒன்று தான். உங்களது மருத்துவரும் கர்ப்ப காலத்தில் வெளியில் அதிகமாக பயணம் செய்ய வேண்டாம் என்று கூறியிருப்பார். இது ஏன் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.
கர்ப்ப காலத்தில் பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லது தான். அதற்காக நீங்கள் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. நீங்கள் அருகில் உள்ள உங்களது அலுவலகம், மார்க்கெட், பார்க் போன்ற இடங்களுக்கு எல்லாம் பயணம் செய்வதினால் எந்த பிரச்சனையும் இல்லை.
நீங்கள் தொலைத்தூரப் பயணங்களை கண்டிப்பாக தவிர்ப்பது மிகவும் நல்லது. தொலைதூரப் பயணங்களை கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் தவிர்ப்பது சிறப்பு. இதனை தவிர்க்க வேண்டும் என்பதற்கான காரணம் என்னவென்றால், இதனால் கருக்கலைப்பு அல்லது வேறு சில பிரச்சனைகள் உண்டாகலாம்.
நீங்கள் சாலைப்பயணம் செய்யும் போது கழிப்பிட வசதிகள் அவ்வளவு சுகாதாரமனதாக இருக்காது. இந்த கழிப்பிடங்களை பயன்படுத்துவதால் சிறுநீர் பாதையில் கிருமிகளின் தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
நீண்ட தூரப்பயணத்தில் காற்று மாசுபாடு போன்றவை இருக்கும். இந்த நச்சுக்கள் குழந்தைக்கும் தீங்கு விளைவிக்க கூடியது. எனவே நீண்ட தூரப்பயணத்தை கருவுற்ற முதல் மூன்று மாதங்களில் தவிர்க்கலாம்.
பொதுவாகவே நீண்ட தூரப்பயணமானது களைப்பை ஏற்படுத்தும். கர்ப்ப காலத்தில் நீண்ட தூரப்பயணம் செய்வது என்பது பெண்களுக்கு அதீத களைப்பை உண்டாக்க கூடியதாக இருக்கும்.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி சற்று குறைவாக தான் இருக்கும். இந்த நேரத்தில் வெளியிடங்களுக்கு பயணம் செய்வதால் சில தேவையற்ற நோய்களை தேடி சென்று பெருவது போல ஆகிவிடும். எனவே கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் தொலைதூரப் பயணத்தை தவிர்ப்பது நல்லது.